ஆடி பூரத்தை முன்னிட்டு, கோவை இடையார்பாளையம் பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ தாய் மூகாம்பிகை அம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடுகள் வெகு விமரிசையாக நடைபெற்றன.

இதையொட்டி, ஸ்ரீ தாய் மூகாம்பிகை அம்மனுக்கு வளையல் அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. அலங்கரிக்கப்பட்ட அம்மனை தரிசனம் செய்வதற்காக கோவை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து நீண்ட வரிசையில் நின்று வழிபட்டனர்.

சிவ ஶ்ரீ மணிகண்ட சிவாச்சாரியார் தலைமையில் கோவில் அர்ச்சகர் வெங்கடேஷ் சிவம் முன்னிலையில் கார்த்திகேயன்,விசாலக்ஷ்மி,பரத் குடும்பத்தினர் மற்றும் குணசேகரன்,லதா
குடும்பத்தினர் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த சிறப்பு நிகழ்வில், அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து பக்தர்களுக்கு அருள் பிரசாதம் வழங்கப்பட்டது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *