கிழக்கு தாம்பரம் 48-வது வார்டு குடியிருப்போர் நலச் சங்கம் மற்றும் வீதி லீடர்ஸ் சார்பில் 80-வது சுதந்திர தின விழா, கிழக்கு தாம்பரம் காந்தி பூங்கா அருகில் சிறப்பாக நடைபெற்றது.

விழாவிற்கு 48-வது வார்டு குடியிருப்போர் நலச் சங்கத்தின் செயலாளர் கோ. மனோகர், முன்னாள் மாமன்ற உறுப்பினர், தலைமை வகித்தார். வீதி லீடர்ஸ் தன்னார்வலர் மோ. தீபன் குமார் வரவேற்புரையாற்றினார். சங்கத்தின் தலைவர் டாக்டர் எம். கோலப்ப பிள்ளை தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.

தொடர்ந்து, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. முன்னாள் ராணுவ வீரர் K. ஜெயராமன் பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார். வீதி லீடர்ஸ் தன்னார்வலர் C. ரகுநாத் பொதுமக்களுக்கு மரக்கன்றுகளை வழங்கினார்.

நிகழ்ச்சியில் கிழக்கு தாம்பரம் காந்தி பூங்கா சுற்றுவட்டாரப் பொதுமக்கள், வியாபாரிகள், வீதி லீடர்ஸ் உறுப்பினர்கள், சிறுவர், சிறுமியர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *