கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் ஒன்றியத்திற்குட்பட்ட கீழ்குப்பம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 80-வது சுதந்திர தின விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. விழாவில் தேசியக் கொடி ஏற்றப்பட்டு, மாணவர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக தனியார் மாநில செய்தித் தொடர்பாளரும், த.வெ.க. நிர்வாகியுமான வீ. முகேஷ், த.வெ.க. கிளைச் செயலாளர் ரமன், கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட பாஜக மாவட்ட விவசாய அணி செயலாளர் சசிகுமார் மற்றும் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் சண்முகம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
விழாவையொட்டி நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சிறப்பு அழைப்பாளர்கள் பரிசுப் பொருட்களை வழங்கி பாராட்டி கௌரவித்தனர்.
இந்நிகழ்ச்சியில் பள்ளித் தலைமையாசிரியர் சி. வெங்கடேசன் மற்றும் ஆசிரியர்கள் சு. திருநாவுக்கரசு, பொ. முருகேசன், பெ. முத்துக்குமார், ம. குலசாபேகம், சு. கமலேசன், சத்யா, ஜே. கீதா உள்ளிட்டோர் கலந்து கொண்டு விழாவைச் சிறப்பித்தனர்.