இந்தியாவின் 80-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, திண்டுக்கல் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் தேசியக் கொடி ஏற்றும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.
முதன்மை மாவட்ட மற்றும் அமர்வு நீதிபதி.பத்மநாபன் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். இந்நிகழ்ச்சியில் நீதிபதிகள், வழக்கறிஞர்கள் மற்றும் நீதிமன்ற பணியாளர்கள் கலந்து கொண்டனர்.


கூடுதல் மாவட்ட நீதிபதி சோர்ணம் ராஜகோபால், குடும்ப நல நீதிமன்ற நீதிபதி பத்மா உள்ளிட்ட நீதித்துறை அலுவலர்கள், திண்டுக்கல் பார் அசோசியேஷன் நிர்வாகிகள், வழக்கறிஞர்கள் மற்றும் நீதிமன்ற ஊழியர்கள் பங்கேற்றனர்.


தேசப்பற்றும், கண்ணியமும் நிறைந்த சூழலில் நடைபெற்ற இவ்விழாவில், நீதித்துறை, சட்டத்துறை மற்றும் நீதிமன்ற நிர்வாகத்தைச் சேர்ந்த அனைவரும் ஒன்றிணைந்து நாட்டின் 80-வது சுதந்திர தினத்தை கொண்டாடினர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *