கரூர் மாவட்ட மக்கள் உரிமைக் கழகத்தின் சார்பில், சுதந்திர தினத்தை முன்னிட்டு வெள்ளியணை அருகே அமைந்துள்ள ராகவேந்திரா அறக்கட்டளையில் உள்ள ஆதரவற்ற குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
மக்கள் உரிமைக் கழகத்தின் கரூர் மாவட்டத் தலைவர் விவேகானந்தன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், தான்தோன்றிமலை ஒன்றிய செயலாளர் பாபு லட்சுமி மற்றும் கரூர் மாவட்ட செயலாளர் ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் மக்கள் உரிமைக் கழகத்தின் நிர்வாகிகள், மகளிர் நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு, அறக்கட்டளையில் தங்கியுள்ள குழந்தைகளுக்கு மதிய உணவாக அசைவ உணவு வழங்கினர்.
இதில் ராகவேந்திரா அறக்கட்டளையின் குழந்தைகள் மற்றும் மக்கள் உரிமைக் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.