கம்பம்: தேனி மாவட்டம் கம்பம் சட்டமன்ற அலுவலக வளாகத்தில் இந்தியாவின் 80-வது சுதந்திர தின விழா சிறப்பாக நடைபெற்றது.

விழாவில், அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள கொடிக்கம்பத்தில் தேசியக் கொடியை ஏற்றுவதற்காக, தனக்கு பள்ளிக் கல்வி வழங்கிய ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் மரியதாஸ் (90) அவர்களை கம்பம் சட்டமன்ற உறுப்பினர் பி.எல்.ஏ. ஜெகநாத் மிஸ்ரா அழைத்து வந்து, அவரது கரங்களால் தேசியக் கொடியை ஏற்ற வைத்தார்.

தனக்கு கல்வி கற்றுத் தந்த ஆசிரியரை கௌரவிக்கும் வகையில் எம்.எல்.ஏ. மேற்கொண்ட இந்த செயல் அங்கு கூடியிருந்த பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், “கம்பம் சட்டமன்றத் தொகுதியின் எம்.எல்.ஏ.வாக இருந்தாலும், தனக்கு கல்வி கற்றுத் தந்த ஆசிரியரை மறக்காமல் அழைத்து வந்து கௌரவித்து, அவரது கரங்களால் தேசியக் கொடியை ஏற்ற வைத்தது பெருமைக்குரிய செயல். இவரை எங்கள் தொகுதி எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுத்ததில் பெருமைப்படுகிறோம்” என்றனர்.

நிகழ்ச்சியில் மாவட்ட இணைச் செயலாளர் செல்வேந்திரன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ராம்குமார் அய்யர், அபுதாகீர், எம்.எல்.ஏ.வின் நேர்முக உதவியாளர்கள் ராஜா, அழகணன், ஹசீப், முத்துமுருகன் உள்ளிட்ட கம்பம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட நகர, பேரூர் மற்றும் ஊரக தமிழக வெற்றி கழக நிர்வாகிகள், கட்சியின் அடிமட்டத் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *