இருசக்கர வாகன ஷோரூம் திடீர் தீ விபத்து பல கோடி இழப்பு என தகவல்.


தூத்துக்குடி திருநெல்வேலி பைபாஸ் சாலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் இருசக்கர வாகன ஷோரூம் உள்ளது. அந்த காம்ப்ளக்ஸிலேயே தனியார் வங்கி இயங்கி வருகிறது இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை காலை இருசக்கர வாகன ஷோரூம் பின்புறம் உள்ள காட்டுப்பகுதியில் தீ பரவியது அந்த தீ மெல்ல மெல்ல அருகில் இருந்த இருசக்கர வாகன ஷோரூம் தீ பரவியது ஷோரூமில் இருந்த பொருட்கள் தீ மல மலவென எரிந்ததால் அங்கு இருந்த பொருட்கள் வெடித்து சிதற ஆரம்பித்தது அங்கு பேட்டரி இருசக்கர வாகன விற்பனை ஷோரூம் உள்ளது இதனை அடுத்து உடனடியாக காவல்துறைக்கும் தீயணைப்புத்துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது

இதனை எடுத்து மூன்று தீயணைப்பு வாகனங்கள் தொடர்ந்து தீயணைத்து வருகின்றனர் இருந்தாலும் இருசக்கர வாகன ஷோரூம் உள்ளே தொடர்ந்து தீப்பிடித்து எரிந்து கொண்டு தான் இருக்கிறது தீயணைப்பு துறையினர் தொடர்ந்து தீயை அணைத்து வருகின்றனர்

இதில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் சேதம் அடைந்திருக்கும் என்று தெரிய வருகிறது மேலும் தனியார் வங்கி ஒன்று உள்ளது தீயணைப்புத்துறையினர் தொடர்ந்து தீயணைக்க போராடி வருகின்றனர் தற்போது காற்று அதிகமாக வீசி கொண்டிருப்பதால் டீ தொடர்ந்து பரவிக் கொண்டு பரவிக் கொண்டுதான் வருகிறது முழுமையான சேதாரத்தின் மதிப்பு பின்பு தான் தெரியவரும் என்று தெரிய வருகிறது

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *