காரைக்காலில் கடந்த ஆண்டு (2025) ஆகஸ்ட் மாதம் 16 வயது சிறுமி மற்றும் 45 வயது பெண்மணியை பாலியல் வன்கொடுமை செய்ததுடன், பெண்மணியை பாலியல் வன்கொடுமை செய்ததை வீடியோவாக எடுத்து அவரது மகனுக்கு அனுப்பி வைத்த குற்றத்திற்காக காரைக்கால் நகர காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் தமிழகப் பகுதியான சீர்காழியை சேர்ந்த ராஜாங்கம் மகன் அசோக்குமார் (26) கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்

. காரைக்கால் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கு விசாரணையின் முடிவில் குற்றவாளிக்கு போக்சோ சட்டப்பிரிவு 6-ன் கீழ் ஆயுள்தண்டனையும், BNS பிரிவு 64(1)-ன் கீழ் 10 ஆண்டுகள் | கடுங்காவல் தண்டனையும், தகவல் தொழில்நுட்பச் சட்டப் பிரிவு 67A-ன் கீழ் 3 ஆண்டு கள் சிறை தண்டனையும், ரூ.4.10 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறப்பட்டது

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *