போதைப்பொருள் கடத்தல் வழக்கில் மேலும் இருவர் கைது
காரைக்கால், அக்.1-காரைக்கால் மாவட்ட முதுநிலை காவல் கண்காணிப்பாளர் வினய் குமார் காட்கே செய்தியாளர்களிடம் கூறியதாவது:
பொதுமக்களின் புகைப்படங்கள் மற்றும் அடையாள ஆவணங்களை தவறாக பயன்படுத்தி போலி சிம்கார்டுகளை செயல்படுத்தி போதைப்பொருள் கடத்தல் கும்பலுக்கு சட்டவிரோத பயன்பாட்டிற்காக விற்பனை செய்ததாக நாகூரை சேர்ந்த ஜெகபர் சாதிக் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும், ஏற்கனவே மெத்தாம்பெட்டமைன் மற்றும் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட நபர்களுடன் போதைப்பொருள் தொடர்பாக தொடர்பு வைத்திருந்த கேரள மாநிலம் மலப்புரத்தை சேர்ந்த ஹர்ஷத் மற்றும் பஷீர் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டு கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட நான்கு சக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
S. செய்யது தாஜுல் உசேன்
மாவட்ட செய்தியாளர்
காரைக்கால்