காரைக்கால் நுகர்வோர் கூட்டமைப்பு மாநில செயலாளர் சிவக்குமாருக்கு சிறந்த சேவைக்கான நற்சான்றிதழ் மற்றும் நினைவுப் பரிசு
காரைக்கால் நுகர்வோர் கூட்டமைப்பின் மாநில செயலாளரும், குடிமை பாதுகாப்புப் படை வீரருமான திரு. சி. சிவக்குமார் அவர்களுக்கு, பொதுமக்கள் நலனுக்காக ஆற்றிய சிறப்பான சேவையைப் பாராட்டி, 2026ஆம் ஆண்டிற்கான சிறந்த சேவைக்கான நற்சான்றிதழும் நினைவுப் பரிசும் வழங்கப்பட்டது.

காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற சுதந்திர தின விழா நிகழ்ச்சியில், மாண்புமிகு வேளாண் துறை அமைச்சர் திரு. ஜி.என்.எஸ். ராஜசேகரன் அவர்கள், மாவட்ட ஆட்சியர் திருமதி இஷித்தா ராத்தி மற்றும் சீனியர் எஸ்.பி. திரு. வினைய்குமார் கட்கே ஆகியோர் இணைந்து திரு. சிவக்குமார் அவர்களுக்கு நற்சான்றிதழையும் நினைவுப் பரிசையும் வழங்கி பாராட்டினர்.
கடந்த பல ஆண்டுகளாக நுகர்வோர் உரிமைகள், பொதுமக்கள் விழிப்புணர்வு, பேரிடர் கால உதவிகள், சாலை விபத்துகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுதல், சுற்றுச்சூழல் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு சமூக நலப் பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் திரு. சிவக்குமார் அவர்களின் சேவைக்கு கிடைத்த இந்த அங்கீகாரம் பாராட்டுக்குரியதாகும்.
இந்த விருது, சமூக சேவையில் தொடர்ந்து ஈடுபடுவதற்கு மேலும் ஊக்கமும் உற்சாகமும் அளிப்பதாக திரு. சிவக்குமார் தெரிவித்தார்.