S.செய்யது தாஜுல் உசேன் மாவட்ட செய்தியாளர்
காரைக்கால்
காரைக்கால், ஆகஸ்ட் 18, 2026: புதுச்சேரி இந்திரா காந்தி அரசு பொது மருத்துவமனையிலிருந்து குழந்தைகள் அறுவை சிகிச்சை, இருதயவியல், நரம்பியல் மற்றும் சிறுநீரகவியல் ஆகிய துறைகளின் சிறப்பு மருத்துவர்கள், 21.08.2026 வெள்ளிக்கிழமை அன்று காரைக்கால் அரசு பொது மருத்துவமனைக்கு வருகை தர உள்ளனர்.
அன்றைய தினம் காலை 10.00 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரை சிறப்பு மருத்துவர்களால் பொதுமக்களுக்கு மருத்துவ பரிசோதனை, சிகிச்சை மற்றும் மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட உள்ளன.
எனவே, காரைக்கால் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள், இச்சிறப்பு மருத்துவ சேவையை உரிய முறையில் பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.