கண்டமங்கலம் ஆகஸ்ட் 18
விழுப்புரம் முதல் நாகப்பட்டினம் வரை தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்பட்டது. அதில் கண்டமங்கலம் ரயில்வே மேம்பாலம் அமைக்கப்பட்டதால் கண்டமங்கலம் காவல் நிலையம் எதிரே அரசு பேருந்துகள் மற்றும் தனியார் பேருந்துகள் நிற்பதற்கு பேருந்து நிறுத்தும் அமைக்கப்பட்டது. ஆனால் பேருந்து நிறுத்துவதற்கென்று அமைக்கப்பட்ட அந்த பேருந்து நிறுத்தத்தில் விழுப்புரம் அரசு போக்குவரத்து மற்றும் தனியார் பேருந்துகள் கண்டமங்கலத்தில் நிற்காமல் செல்கின்றன.
இதனால் பொதுமக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகின்றனர். எனவே இதனை கண்டித்து கண்டமங்கலம் பகுதியில் உள்ள சமூக ஆர்வலர்கள் அனைவரும் ஒன்றிணைந்து பேருந்துகள் நின்று செல்ல வேண்டும் என்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஆர்ப்பாட்டத்திற்கு சமூக ஆர்வலர் சௌந்தரராஜன் தலைமை வகித்தார் முத்து கார்த்திகேயன் வரவேற்புரை ஆற்றினார் சமூக ஆர்வலர் சேகர் மோகன் ஜி துரை ஏழுமலை உலகநாதன் குமரன் ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள் மேலும் கண்டமங்கலம் சின்ன பாசமுத்திரம் பண்ணகுப்பம் பெரிய பாவம் சமுத்திரம் தாண்டமுத்து குப்பம் ரசம் புத்திர பாளையம் ஆகிய கிராமங்களில் இருந்து சமூக ஆர்வலர்கள் திரளாக கலந்து கொண்டனர் ஆர்ப்பாட்டத்தில் நிறைவாக சமூக ஆர்வலர் அம்பேத் நன்றி கூறினார்.