தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட அணைக்கரைப்பட்டி ஊராட்சியின் உட்கடை கிராமமான வலசதுறை கிராமத்தில் செவ்வாய்க்கிழமை ஊரக வளர்ச்சி துறை மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப் பணிகள் மாவட்ட ஆட்சித் தலைவர் இரா வைத்திநாதன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்

இந்த ஆய்வில் வலசதுறை கிராமத்திலிருந்து அத்தி யூத்து ஊராட்சி வரை தார் சாலை அமைக்க மலை வாழ் மக்கள் கோரிக்கை வைத்ததையொட்டி ஊரக வளர்ச்சித் துறையின் மூலம் முதல் கட்டமாக விக்சித் பாரத் கிராமப்புற வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார திட்டத்தின் கீழ் முதலில் சாலைகளில் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள மாவட்ட ஆட்சித் தலைவர் அரசு அலுவலர்களுக்கு அறுவுறுத்தியதுடன் இதனைத் தொடர்ந்து கிராமப்புற கிராமப்புற சாலை மேம்பாட்டு திட்டத்தின் மூலம் சாலை அமைக்க உரிய இடங்களை விரைவு செய்து அதற்கானப் பணிகளை மேற்கொள்ள வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் ஒரு வருவாய்த்துறை அலுவலர்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என அறிவுறுத்தினார்

இதன் பின்னர் வலசதுறை மலைவாழ் மக்களை சந்தித்து கோரிக்கைகள் குறித்து கேட்டறிந்தார் அப்பொழுது அப்பகுதி மலைவாழ் மக்கள் இந்த மலைப்பகுதியை சுற்றி சுமார் 150 குடும்பங்கள் வசித்து வருகிறோம். தினசரி நகர் பகுதிக்கு சென்று வருவதற்கு போதிய சாலை வசதி இல்லாமலும் மருத்துவ வசதி உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்கு மிகவும் சிரமப்பட்டு வருகிறோம் என்று தெரிவித்தார்கள்

அப்பொழுது அப்பகுதி மக்களிடம் தங்கள் கோரிக்கைகளுக்கு விரைவில் தீர்வு காணும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று மாவட்ட ஆட்சித்தலைவர் இரா வைத்திநாதன் உறுதியளித்தார் இந்த ஆய் வில் போடிநாயக்கனூர் தாசில்தார் சுருளி போடிநாயக்கனூர் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மக்கத்தம்மாள் சோனா அணைக்கரைப்பட்டி ஊராட்சி செயலர் முருகன் என்ற பொட்டு முருகேசன் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *