கோவை PSG பார்மசி கல்லூரியின் 20-வது பட்டமளிப்பு விழா கோலாகலம்: 148 பேருக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன!
PSG & Sons’ Charities-ன் ஒரு அங்கமான PSG பார்மசி கல்லூரியின் 20-வது பட்டமளிப்பு விழா, PSG IMSR அரங்கத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் மொத்தம் 148 மாணவ, மாணவிகளுக்குப் பட்டங்கள் வழங்கப்பட்ட நிலையில், கல்விப் பயின்ற காலத்தில் சிறப்பாகச் செயல்பட்டு அதிக மதிப்பெண்கள் பெற்ற 23 பேருக்குச் சிறப்புப் பரிசுகள் வழங்கிக் கௌரவிக்கப்பட்டது.
குறிப்பாக, வகுப்பின் சிறந்த மாணவருக்கான (Best outgoing) தங்கப் பதக்கத்தைச் செல்வி ஹேமா வி. தட்டிச் சென்றார். PSG & Sons’ Charities-ன் நிர்வாக அறங்காவலர் திரு. எல். கோபாலகிருஷ்ணன் தலைமை தாங்கித் தலைமை உரையாற்ற, NIPER கவஹாத்தி மற்றும் கொல்கத்தா மையங்களின் இயக்குநர் டாக்டர் யு.எஸ்.என். மூர்த்தி சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றுப் பட்டமளிப்பு உரை வழங்கி மாணவர்களுக்குப் பட்டங்களை வழங்கினார்.
முன்னதாக, கல்லூரி முதல்வர் டாக்டர் எம். ராமநாதன் வரவேற்புரையாற்றினார்; வேதியியல் துறைத் தலைவரும் பேராசிரியருமான டாக்டர் கே. உமா பட்டதாரிகளுக்கு மருந்தாளுநருக்கான உறுதியேற்பு (Pharmacist’s Oath) நிகழ்வை நடத்தி வைக்க, துணை முதல்வர் டாக்டர் வி. சங்கர் நன்றியுரையுடன் விழா இனிதே நிறைவுற்றது.