காரைக்கால் குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை துணை இயக்குநர் அறிவிப்பு ஒன்று வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:

தேசிய உணவு பாதுகாப்புச் சட்டத்தின் (NFSA) கீழ், இந்திய அரசின் உணவு மற்றும் பொது விநியோகத் துறை (MoFPD) மூலம் செயல்படுத்தப்படும் ‘பிரதான் மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனா’ (PMGKAY) திட்டத்தின் பயனாளிகளுக்கு வழங்கப்படும் மாதாந்திர உணவு தானிய மானியம். நேரடி வங்கிப் பரிமாற்றத்திற்கு (DBT) பதிலாக, பயனாளிகளின் டிஜிட்டல் வாலட் கணக்கில் மத்திய வங்கி டிஜிட்டல் நாணயமாக (CBDC) வரவு வைக்கப்படும். இனி வரும் காலங்களில் CBDC முறையில் மட்டுமே மானியம் வழங்கப்படும். கைப்பேசி எண்ணைப் பதிவு செய்யாத அட்டைதாரர்களுக்கு உணவு தானிய மானியம் நிறுத்தி வைக்கப்படும்.

இதுவரை ஆதார் உடன் இணைக்கப்பட்ட அலைபேசி எண்ணை குடும்ப அட்டையுடன் இணைக்காத பயனாளிகள், மானியம் தடையின்றி தொடர்ந்து கிடைக்க வரும் 21.08.2026-க்குள் காரைக்கால் மாவட்டத்தில் உள்ள தங்களது நியாய விலை கடைக்குச் சென்று உரிய நடைமுறைகளை முடிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

S. செய்யது தாஜுல் உசேன்
மாவட்ட செய்தியாளர்
காரைக்கால். 9385856800

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *