அரியலூர் மாவட்ட ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்கம் செயற்குழு கூட்டம் அரியலூரில் உள்ள சேவைச் சுடரொளி கோ தங்கையன் அரங்கத்தில் நடந்தது கூட்டத்திற்கு சங்கத்தின் தலைவர் சிவசாமி தலைமை தாங்கினார்
செயல் தலைவர் தமிழ்ச்செல்வன் அனைவரையும் வரவேற்றுப் பேசினார் துணை செயலாளர் அரியலூர் ஆசிரியர் நல்லப்பன் செயற்குழு கருத்துரைகளை எடுத்து விளக்கினார் நிர்வாக குழு உறுப்பினர்கள் முத்துசாமி கலியமூர்த்தி ஆகியோர் குறல் விளக்கம் அளித்தனர் சங்க துணை செயலாளர் துரைசெல்வராசு முன்னிலை வகித்தார்
சங்க செயலாளர் மகாலிங்கம் கூட்ட அறிக்கையை வாசித்தார் 70 வயது நிரம்பிய ஓய்வூதியர்களுக்கு 10 சதவீதம் கூடுதல் ஓய்வூதியம் உடனே வழங்க வேண்டும் எட்டாவது ஊதிய குழுவில் நமக்கும் ஓய்வூதிய பலன் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் மருத்துவ காப்பீட்டு திட்டத்தை அரசே ஏற்று நடத்த வேண்டும் புறவழிச் சாலை அரியலூர் ரிதன்யா திருமண அரங்கம் அருகில் பேருந்து நிறுத்தம் அமைத்து தர வேண்டும் மருத்துவ படியை மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்குவது போல் மாநில அரசு ஓய்வூதியர்களுக்கும் ரூபாய் ஆயிரம் உயர்த்தி தர வேண்டும் அரசு அலுவலகங்களில் காலி பணி இடங்களை உடனே நிரப்பிட வேண்டும் என்பன போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது
நிர்வாக குழு உறுப்பினர் மதியழகன் அனைவருக்கும் நன்றி கூறினார் மேலும் கிருஷ்ணன் முத்துமதியழகன் கலையரசன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர் விரைவில் வருகிற 24 ஆம் தேதி தஞ்சாவூர் வாசன் கண் மருத்துவமனை மருத்துவர்களால் அரியலூரில் நடைபெற உள்ள சங்க உறுப்பினர்கள் கண் சிகிச்சை முகாம் குறித்து வாசன் கண் மருத்துவமனை பிஆர்ஓ பாலமுருகன் எடுத்து கூறினார்