காரைக்கால் கோவில்பத்து தந்தை பெரியார் அரசு மேல்நிலை பள்ளியில், வேர்ட்ஸ்வொர்த் ஆங்கில இலக்கிய மன்றம் தொடக்க விழா நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கிய பள்ளி முதல்வர் பி.விஜயமோகனா, ஆங்கில மொழியின் முக்கியத்துவம் குறித்தும், மாணவர்கள் ஆங்கிலத்தில் பேசும் திறனை வளர்த்துக் கொள்ள வேண்டியதன் அவசியம் குறித்தும் உரையாற்றினார். மேலும், மாணவர்கள் நிறைய ஆங்கில புத்தகங்களை படிக்க வேண்டும் என்றும், தனக்கு தெரிந்ததை ஆங்கில மொழியில் தன்னம்பிக்கையுடன் பேச முன்வர வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

மன்ற ஒருங்கிணைப்பாளரும், ஆங்கில விரிவுரையாளருமான இரா.மேகலா மன்றத்தின் முக்கிய குறிக்கோள் குறித்து விளக்கினார். மாவட்ட ஆட்சியரின் செயலர் பி.வித்யாதரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு இலக்கிய மன்றத்தின் தகவல் பலகையை திறந்து வைத்து சிறப்புரையாற்றினார். அப்பொழுது, இன்றைய டிஜிட்டல் உலகில் ஆங்கிலத்தின் அவசியம் குறித்து மாணவர்களுக்கு எளிதில் புரியும் வகையில் பல்வேறு எடுத்துக்காட்டுகளை கதைகள் வாயிலாக கூறினார்.

நிகழ்ச்சியின்போது கதை சொல்லுதல், ஆங்கிலத்திலுள்ள இடியம்ஸ் & ப்ரேஸஸ், ஆங்கிலப் பாடல்களில் வரும் இலக்கிய நயம், ஆங்கில கவிஞர்கள் பற்றிய பேச்சு, ட்ங் டிவிஸ்டர் போன்ற செயல்பாடுகளில் கலந்துக் கொண்டு மாணவர்கள் தங்களது திறனை வெளிப்படுத்தினர்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை விரிவுரையாளர்கள் மேகலா, விஜயராணி மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர். முடிவில் ஆசிரியை சந்தியா நன்றி கூறினார்.

S. செய்யது தாஜுல் உசேன்
மாவட்ட செய்தியாளர்
காரைக்கால்
9385856800

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *