காரைக்கால், அக்டோபர் 2:
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, வடகிழக்கு பருவமழையை கருத்தில் கொண்டு காரைக்கால் மாவட்டத்தில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களின் உடல்நலம் மற்றும் பாதுகாப்பை கருத்தில் கொண்டு முன்னெச்சரிக்கை தடுப்பூசி மற்றும் மருத்துவ முகாம் நடைபெற்றது.
தூய்மை பணியாளர்கள் தினசரி பணிபுரியும் குப்பைக் கிடங்கு பகுதிக்கே மருத்துவக் குழுவினர் நேரில் சென்று, அங்கு பணியாற்றி வரும் தூய்மை பணியாளர்களுக்கு பருவமழை காலத்தில் ஏற்படக்கூடிய நோய்களைத் தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை தடுப்பூசிகளை செலுத்தினர். மேலும், அவர்களின் உடல்நலம் தொடர்பான தேவையான மருத்துவ ஆலோசனைகளும் வழங்கப்பட்டன.
இந்த முகாமில் டாக்டர் S. சிவசங்கரி முத்து கணேஷ், M.S. பொது அறுவை சிகிச்சை நிபுணர் அவர்கள் கலந்து கொண்டு தூய்மை பணியாளர்களுக்கு தடுப்பூசிகளை செலுத்தினார்.
தங்களது பணியிடத்திற்கே மருத்துவக் குழுவினர் நேரில் வந்து தடுப்பூசி மற்றும் மருத்துவ சேவை வழங்கியதற்கு தூய்மை பணியாளர்கள் மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவித்தனர்.
இந்நிகழ்வில் B I S TRAINER GOVT OF INDIA, நுகர்வோர் சங்கங்கள் கூட்டமைப்பு மாநிலம் செயலாளர் S.சிவக்குமார் , நுகர்வோர் சங்கங்கள் கூட்டமைப்பு புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டம் மாநிலம் பயிற்சியாளர் முனைவர் ஜோதி( எ) புஷ்பவள்ளி இவர்களின் முன்னிலையில் மற்றும் தூய்மை பணியாளர் அலுவலர் அதிகாரிகள் வெங்கட்ராமன் மற்றும் கார்த்திகா பலர் கலந்து கொண்டனர்.
பொதுமக்களின் சுகாதாரத்தை பாதுகாப்பதில் முக்கியப் பங்காற்றும் தூய்மை பணியாளர்களின் உடல்நலத்தை கருத்தில் கொண்டு, பருவமழை கால முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த மருத்துவ மற்றும் தடுப்பூசி முகாம் நடைபெற்றது.