தஞ்சை மாவட்டம், பேராவூரணி நகரில் காந்தி பூங்கா அருகில் கடந்த ஜூலை 30ஆம் தேதி, முன்னாள் முதல்வர் கலைஞரின் 103 வது பிறந்தநாள் விழாவும், வாக்காளர்களுக்கு நன்றி அறிவிப்பு விழாவும் நடைபெற்றது.
இந்த விழாவிற்காக சாலையின் இரு புறங்கள் மற்றும் அருகிலுள்ள அண்ணா சிலை ஆகிய இடங்களில் திமுக கொடிகள் கட்டவும். மற்றும் அலங்கார மின்விளக்குகள் அமைக்கவும் மரக்கம்புகள் கட்டப்பட்டு மின்விளக்குகள் அமைக்கப்பட்டு பொதுக்கூட்டமும் நடைபெற்று முடிந்தது.
இந்நிலையில் சாலை ஓரங்களில் நடப்பட்ட கம்புகள் அனைத்தும் அப்புறப்படுத்தப்பட்டு விட்டன. ஆனால் அண்ணா சிலையில் கட்டப்பட்ட மரக்கம்புகள் மட்டும் இன்னும் அகற்றப்படவில்லை. இதனால் அந்தப் பகுதியில் வரும் பஸ், பள்ளி குழந்தைகள் செல்லும் வேன்கள் திரும்பும் போது குத்தி ஆபத்து ஏற்படும் நிலை உள்ளது.
பெரிய விபத்துக்கள் ஏற்பட்டு உயிரிழப்பு நடக்கும்முன்பே அந்த மரக்கம்புகளை அப்புறப்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
பேராவூரணி செய்தியாளர் நீலகண்டன் .