துறையூர் ஆக-20
திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள உப்பிலியபுரம் ஊராட்சி ஒன்றியம் நாகநல்லூர் கிராமத்தை சேர்ந்த பழனிசாமி என்பவர் தனது இடத்தின் பரப்பளவு மற்றும் வரைபடத்தை திருத்தம் செய்து முசிறி கோட்டாட்சியர் பிறப்பித்த ஆணைப்படி பட்டா வழங்க வேண்டும் என துறையூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு பெட்ரோல் கேனுடன் வந்து தீக்குளிக்க முயற்சி செய்தார்.

உடனே அருகிலிருந்த துறையூர் போலீசார் தடுத்து காப்பாற்றினர்.இதனால் பரபரப்பு காணப்பட்டது.உப்பிலியபுரம் ஊராட்சி ஒன்றியம்,நாக நல்லூரை சேர்ந்த பழனிசாமி என்பவருக்கு அவருடைய பாட்டி மருதாயி அம்மாள் என்பவர் தான செட்டில்மெண்ட் பத்திரம் மூலம் தனக்கு எழுதி கொடுத்த இடத்தின் பரப்பளவு படி இல்லாமல் யூ.டி.ஆர்-ல் தவறுதலாக குறைந்த அளவு உள்ள நிலத்திற்கு பட்டா வழங்கப்பட்டுள்ளது.

மேலும் வரைபடத்திலும் தவறு உள்ளதையும் தெரிந்து கொண்ட பழனிசாமி பத்திரத்தில் உள்ளபடி அளவுகளை திருத்தம் செய்து பட்டா வழங்கவும், வரைபடத்தில் திருத்தம் செய்து தரவும் உத்தரவு விடக் கோரி பழனிசாமி 2019ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தாக்கல் செய்தார்.இதன்படி வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை,மாவட்ட வருவாய் அலுவலருக்கு யூடிஆர் -ல் திருத்தம் செய்ய பழனிசாமி கொடுத்த மனு மீது விசாரணை செய்து நீதி வழங்கும் படி உத்தரவு பிறப்பித்தது.

இதன் அடிப்படையில் முசிறி கோட்டாட்சியர், பழனிசாமிக்கு பத்திரத்தில் உள்ள அளவுபடி யூடிஆர்-ல் நில அளவை திருத்தம் செய்தும் வரைபடத்தில் திருத்தம் செய்தும் பட்டா வழங்க உத்தரவிட்டார்.

ஆனால் வட்டாட்சியர் அலுவலக அதிகாரிகள் அலைக்கழித்ததாக கூறப்படுகிறது.இதனால் விரக்த்தி அடைந்த பழனிசாமி துறையூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு பெட்ரோல் கேனுடன் வந்து தீக்குளிக்க முயற்சி செய்தார்.

உடனே அருகில் இருந்த போலீசார் பெட்ரோல் கேனை பிடுங்கி காப்பாற்றி அவரை மீட்டு வட்டாட்சியர் சித்ராவிடம் ஒப்படைத்தனர். பழனிசாமியிடம் விசாரித்த வட்டாட்சியர் சித்ரா விரைந்து பட்டா வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இதனால் அங்கு பரபரப்பு காணப்பட்டது.

வெ.நாகராஜீ
திருச்சி மாவட்ட செய்தியாளர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *