காரைக்கால் மின்துறை உதவி பொறியாளர் (நகரம்-1) அறிவிப்பு ஒன்று வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:

உயர் மின் அழுத்தப் பாதையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்வதால் திரு-பட்டினம் PPCL துணை மின் நிலையம் முதல் நிரவி ஒடுதுறை SLM திருமண மண்டபம் வரை, PPCL முதல் திருமலைராஜனாறு வரை உள்ள கிழக்கு பகுதி முழுவதும்,

இராமசாமி கோவில் தெரு, காமன் கோவில் தெரு, வெங்கடேசப் பெருமாள் தெற்குத் தெரு, வெங்கடேசப் பெருமாள் வடக்குத் தெரு, பாபநாரிசு கோவில் தெரு, முடுக்குத் தெரு, மார்க்கெட் வீதி, பண்டகசாலை தெரு,

அபிராமி அம்மன் தெற்கு வீதி, அபிராமி அம்மன் கீழ வீதி, பெரிய மரைக்காயர் தெரு, தட்டாரத் தெரு, திட்டச்சேரி சாலை, அரிசிக்கார தெரு, சட்டையப்பபிள்ளை தெரு, பெரியப்பள்ளி தெரு, கட்டபிள்ளை மரைக்காயர் தெரு, ஹாலித் மரைக்காயர் தெரு,

காந்தி சாலை, பட்டினச்சேரி, வடகட்டளை, எடத்தெரு, கீழையூர், நாகூர் மெயின் ரோடு, நடுகளம் பேட், அக்கரைவட்டம், கருக்களாச்சேரி, கீழஓடுதுறை, நேதாஜி நகர் ஆகிய பகுதிகளில் நாளை 20.08.2026 வியாழக்கிழமை காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்று தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

இவ்வாறு அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

S.செய்யது தாஜுல் உசேன்
மாவட்ட செய்தியாளர்
காரைக்கால்
9385856800

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *