தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட 60 வாா்டு பகுதிகளிலும் நடைபெறும் பணிகளை சூழற்சி முறையில் பணிகளை துாிதப்படுத்தி வரும் நிலையில் பாத்திமாநகா் ஜாா்ஜ் ரோடு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்று வரும் வடிகால் புதிய பேவா்பிளாக்சாலை அமைக்கும் பணி அங்கிருந்த பொதுமக்களின் கோாிக்கை படி ஏற்கனவே உள்ள வடிகால்கள் இணைக்கும் பணிகள் ஆரம்பமாகும் போகும் இடங்களை பாா்வையிட்டு நுண்உர செயலாக்க மையத்தினையும் பாா்வையிட்டு ஆய்வு செய்து அந்த பகுதியில் உள்ள பாதையில் உள்ள மின்கம்பங்களில் தனியாா் பங்களிப்புடன் விளக்குகள் அமைக்கப்படுவதையும் பாா்வையிட்ட பின் மேயா் ஜெகன் பொியசாமி கூறுகையில் மாநகராட்சி மேயராக பொறுப்பேற்ற பின் 60 வாா்டுகளிலும் எவ்வித பாரபட்சமின்றி மாமன்ற உறுப்பினா்களின் கோாிக்கைகளையும் பொதுமக்களின் கோாிக்கை மற்றும் புகாா்களுக்கு முக்கியத்துவம் எதற்கு அளிக்கப்பட வேண்டும் என்று முன்னுாிமை படுத்தி எல்லா பணிகளையும் நல்லமுறையில் செய்து வருகிறோம்.
தூத்துக்குடி மாநகராட்சி கிழக்கு மண்டலத்தில் உள்ள நுண்உரம் செயலாக்க மையம் கடந்த அதிமுக ஆட்சியில் 23.8.2018ல் தொடங்கப்பட்டு 24. 25 40 46 47 ஆகிய 5 வாா்டுகளிலிருந்து 17 வாகனங்கள் மூலம் சேமிக்கப்படும் பொதுமக்களின் தேவையற்ற கழிவுகளை கொண்டு வந்து அதில் உரம்தயாாிப்புக்கு தேவையான காய்கறி உள்ளிட்ட சில பொருட்களை எடுத்துக்கொண்டு மற்ற மக்காத குப்பைகளான கோிபேக் எலக்டாாினிக் சம்பந்தமான கழிவுகள் ஆகியவற்றை உடனுக்குடன் தருவைகுளம் உரக்கிடங்குக்கு எடுத்துச்செல்லப்படுகிறது.
தயாாிக்கப்படுகின்ற சில உரங்களும் பலருக்கு வழங்கப்படுவதன் மூலம் பொதுமக்கள் பயனடைந்து வருகின்றனா். கடந்த 8 ஆண்டுகளாக இயங்கி வரும் இந்த உரங்கிடங்கு பகுதியில் பல்வேறு வகையான ெசடி கொடி மரங்களுடன் காற்றோட்டமான சுகாதாரமான முறையோடு தூய்மை பணியாளா்களும் பணியாற்றி வரும் நிலையில் உணவு அருந்துவதற்கும் நல்ல நிலையில்இருப்பிடம் அமைக்கப்பட்டு நடைபெற்று வருகின்ற பணிகளால் எவ்வித பாதிப்பும் இல்லாத நிலையில் இதே போல் பல பகுதிகளிலும் சேமிப்பு கிடங்கு செயல்பட்டு வருகிறது
மாநகாட்சி யை பொறுத்த வரையில் மாசு இல்லாத மாநகராட்சியை உருவாக்கும் வகையில் வீட்டிற்கு ஒரு மரம் வளா்ப்போம் என்ற கொள்கையோடு அனைவரும் ஓத்துழைத்து சுகாதாரமான வாழ்க்கையோடு பொதுமக்கள் வாழ வேண்டும் என்பதை கருத்தில் கொண்டுதான் மாநகராட்சி நிா்வாகம் பணியாற்றி வருகின்றது. அதற்கு அனைத்து தரப்பினரும் முழு ஓத்துழைப்பு வழங்க வேண்டும். என்று கேட்டுக்கொண்டாா்.
ஆய்வின் போது துைண மேயா் ஜெனிட்டா, சுகாதார ஆய்வாளா் ஹாிகணேஷ், மாவட்ட திமுக அவைத்தலைவா் செல்வராஜ், மாவட்ட மீனவரணி அமைப்பாளர் அந்தோணி ஸ்டாலின், மாநகர மீனவரணி அமைப்பாளர் டேனியல் வட்டச்செயலாளர் ரவீந்திரன், பகுதி பிரதிநிதிகள் ஜேஸ்பா் பிரபாகா் மற்றும் மாநகராட்சி அலுவலா்கள் உடனிருந்தனா்.