தேனி மாவட்டம் கம்பம் ஸ்ரீ ஆதி சுஞ்சனகிரி மகளிர் கல்லூரியில் கல்லூரி என் எஸ் எஸ் Women cell சார்பில் பல் மருத்துவம் தோ கண் மருத்துவம் கண் மருத்துவம் மற்றும் மகளிர் மருத்துவம் போன்ற மருத்துவ முகாம்கள் கல்லூரி நிறுவனச் செயலர் கம்பம் என் இராமகிருஷ்ணன் தலைமையில் கல்லூரி இணைச் செயலாளர் என்.எம்.ஆர். வசந்தன் கல்லூரி ஒருங்கிணைப்பாளர் வைஷ்ணவி வசந்தன் கல்லூரி முதல்வர் டாக்டர் ஜி ரேணுகா ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது கல்லூரி துணை முதல்வர் டாக்டர் வி வாணி அனைவரையும் வரவேற்று பேசினார்
கம்பம் விஜயா பல் மருத்துவமனை நிறுவனர் மற்றும் தலைமை மருத்துவர் ஆல் சசி விஜய்ராஜ் பல் அறுவை சிகிச்சை நிபுணர் மற்றும் அழகியல் ஆலோசகர் மேலாண்மை இயக்குனர் டாக்டர் கே நந்தினி பல் மருத்துவம் குறித்து மாணவிகளுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்
பாக்யா மருத்துவமனை டாக்டர் விக்னேஷ் கிரசென்ட் கிளினிக் மகப்பேறு மற்றும் மகளிர் நல மருத்துவர் டாக்டர் ஆர் நமீரா மற்றும் வசந்தம் ஆப்டிகல்ஸ் கண் பார்வை மருத்துவர்கள் கண் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளுக்கு மாணவிகளின் கேள்விகளுக்கு விரிவான விளக்கம் அளித்து பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்கள்
மேற்கண்ட நான்கு மருத்துவ முகாம்களிலும் கல்லூரி அனைத்து துறை சார்ந்த மாணவிகளும் பேராசிரியர்களும் கல்லூரி அலுவலர்களும் முகாமில் பங்கேற்று பயனடைந்தனர் கல்லூரி என்.எஸ்.எஸ். ஒருங்கிணைப்பாளர் முனைவர் ஆர் தமிழ்ச்செல்வி நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்