அரியலூர் வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு செய்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபபட்டனர் அப்பாவி தமிழர்கள் மூன்று பேரை சுட்டுக்கொன்ற கர்நாடக வனத்துறையினரை கண்டித்து அரியலூர் வழக்கறிஞர் சங்கத்தினர்

புதன்கிழமை அரியலூர் ரயில் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் அப்பாவி தமிழர்களை சுட்டுக்கொன்ற கர்நாடக வனத்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் கர்நாடக மாநில அரசு காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவு படி காவிரியில் நீரை திறந்துவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கையை வலியுரித்தி அரியலூர் ரயில் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

கடந்த 17ஆம் தேதி நீதிமன்றம் முன்பும், 18ஆம் தேதி தலைமை தபால் நிலையம் முன்பும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

19ஆம் தேதி புதன்கிழமை அரியலூர் ரயில் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் அரியலூர் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் சுமார் 2 மணி நேரம் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது வழக்கறிஞர் சங்க தலைவர் இரா மனோகரன் தலைமை தாங்கினார் சங்க செயலாளர் ராஜா பொருளாளர் கமலக்கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர் ராமகோவிந்தராஜன் சண்முகம் பரமேஸ்வரன் மூகாம்பிகை செல்லசுகுமார் பாலாஜிசிவாஜி அருணன் விஜி அன்பரசு முத்துபாண்டி பிரபாகரன் உள்ளிட்ட வழக்கறிஞர்கள் போராட்டத்தில் கலந்து கொண்டனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *