அரியலூர் சிமெண்ட் சிட்டி அரிமா சங்கம் புதிய நிர்வாகிகள் பணி ஏற்பு விழா சிறப்பாக நடந்தது தலைவர் ஜெ சஞ்சய்காந்தி செயலாளர் ராம்குமார் ராஜேந்திரன் பொருளாளர் அழகரசு ஆகியோர் புதிய நிர்வாகிகளாக பொறுப்பேற்றுக் கொண்டனர் அரிமா மாவட்ட இரண்டாம் துணை நிலை ஆளுநர் ராஜன் புதிய நிர்வாகிகளை பணியில் அமர்த்தி நலத்திட்ட உதவிகள் வழங்கி விழா சிறப்புரையாற்றினார்

விழாவிற்கு முன்னாள் தலைவர்கள் டாக்டர் ராஜேந்திரன் என் வெங்கடேசன் ஆகியோர் தலைமை தாங்கினார்கள் புதிய உறுப்பினர்களை சங்கத்தில் இணைத்து பொறியாளர் ராமதுரை வாழ்த்தினார் மாவட்ட லியோ சங்க தலைவர் ஜெமீன் வெங்கடேசன் சேவை திட்டங்கள் வழங்கினார்

அரியலூர் நகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது சாலை ஓர வியாபாரிகளுக்கு நிழல் குடை வழங்கப்பட்டது வள்ளலார் கல்வி நிலையம் மாணவ மாணவிகளுக்கு நோட்டு புத்தகங்கள் வழங்கப்பட்டது ஆளுநரின் திட்டமான பெரிதினும்பெரிது கேள் என்ற ஆலோசனையின் பேரில் ஆட்டுக்குட்டி மகளிர் மேம்பாட்டுக்காக வழங்கப்பட்டது விழாவில் ஏராளமானோர் கலந்துகொண்டு புதிய நிர்வாகிகளை பாராட்டியும் வாழ்த்தியும் பேசினார்கள்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *