கோவை வருவாய் மாவட்டத்திற்கு உட்பட்ட 18 குறுமையங்களுக்கான குறுமைய விளையாட்டு போட்டிகள் ஆஸ்ரம் மெட்ரிக் பள்ளி சார்பாக கடந்த சில நாட்களாக நடைபெற்றன..

இந்நிலையில் மாநில அளவிலான போட்டிகளுக்கு தேர்வு செய்யப்படும் வருவாய் மாவட்ட அளவிலான இறுதிக்கட்ட போட்டிகள் கோவை ஆஸ்ரம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. துவக்க விழா ஆஸ்ரம் மெட்ரிக் பள்ளியின் தாளாளர் தேவேந்திரன் தலைமையில் நடைபெற்றது..

இதில் சிறப்பு விருந்தினராக காவல் உதவி ஆணையர் மகேஷ்குமார் கலந்து கொண்டு போட்டிகளை துவக்கி வைத்தார் விழாவில் கோவை வருவாய் மாவட்ட விளையாட்டு போட்டி குழு பொது செயலாளர் மற்றும் ஆஸ்ரம் பள்ளி நிர்வாகி உதயேந்திரன்,துணை செயலாளர்கள் சைமன் துரை,கெம்புராஜ்,மற்றும் வித்யாஸ்ரம் பள்ளி நிர்வாக இயக்குனர் சவுந்தர்யா,ஆஸ்ரம் பள்ளி முதல்வர் சரண்யா ஆகியோர் உடன் இருந்தனர்..

சைக்கிள் பந்தயம், பாக்சிங் மற்றும் கேரம் உள்ளிட்ட போட்டிகளில் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர் இதில் தேர்வு செய்யப்படும் வீரர்,வீராங்கனைகள் மாநில அளவிலான போட்டிகளுக்கு தேர்வு செய்ய இருப்பதாக போட்டி ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர் தொடர்ந்து நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் குமரேசன் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி கவுரவித்தார்…

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *