தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420
குண்டடம்,
குண்டடம் காவல் நிலைய காவல் ஆய்வாளர் விவேக் தலைமையில் ‘ஃபுட் ரோடு’ விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.இதில், பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் தங்களுக்கு ஏற்படும் பிரச்சினைகள், நீதி மற்றும் அநீதி தொடர்பான புகார்கள் குறித்து காவல்துறையினரிடம் எவ்வாறு தெரிவிப்பது, சட்டரீதியாக புகார் அளிக்கும் நடைமுறைகள் மற்றும் காவல்துறையை அணுகும் முறைகள் குறித்து விளக்கமளிக்கப்பட்டது.
மேலும், பொதுமக்கள் தங்களது பிரச்சினைகள் தொடர்பாக உரிய முறையில் காவல்துறையை அணுகி, சட்டத்தின் மூலம் தீர்வு காண வேண்டும் எனவும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.