தூத்துக்குடி தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் அமைச்சரவையில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் இணைந்ததற்கு எதிா்ப்பு தொிவித்து இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கட்சி மாவட்ட துணைத்தலைவா் நவ்ரங் சகாப்தீன் மாவட்ட துணைச்செயலாளர் முகமது அலி பாட்ஷா, தலைமையில் 100 போ் அக்கட்சியிலிருந்து விலகி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கீதாஜீவன் முன்னிலையில் கலைஞா் அரங்கில் திமுகவில் இணைந்தனா்.
அனைவரையும் கீதாஜீவன் சால்வை அணிவித்து கௌரவித்து திமுகவில் இணைந்ததற்கு வாழ்த்தி வரவேற்று பேசுகையில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கட்சி மாவட்ட துணைத்தலைவா் நவ்ரங் சகாப்தீன், மாவட்ட துணைச்செயலாளர் முகமது அலி பாட்ஷா தலைமையில் திமுகவில் இணைந்துள்ள அனைவரையும் மனதார வரவேற்கிறேன். கருப்பு சிவப்பு கொடியுடன் கொள்கையோடு எல்லோரும் இணைந்தே பணியாற்றுவோம் வரும் காலத்தில் தங்களது பகுதியில் திமுக ஆட்சியில் நடைபெற்ற திட்டங்களையும் ஸ்டாலின் சாதனைகளையும் மக்களுக்கு எடுத்துக்கூறி திமுகவின் வெற்றிக்கு பணியாற்ற வேண்டும் என்று கேட்டுக்கொண்டாா். இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கட்சியை சோ்ந்த நகர செயலாளர் ஜாபா் சாதிக்கான் மாவட்ட வழக்கறிஞர் அணி முகமது ரபிக், மற்றும் மன்சூா் அபுதாஹிா் யூசூப், அன்வா் பாட்ஷா, சாகுல்ஹமீது, அக்பா், சாகாப்தீன், உள்பட 100போ் திமுக வில் இணைந்தனா்.
நிகழ்ச்சியில் மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், மாவட்ட மருத்துவ அணி தலைவா் அருண்குமாா், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி துணை அமைப்பாளர் பிரபு, மாநகர இளைஞர் அணி துணை அமைப்பாளர் ரவி, முன்னாள் பெருமாள் கோவில் அறங்காவலா் குழு தலைவர் செந்தில்குமாா், வட்டச்செயலாளா் கங்காராஜேஷ், வட்டப்பிரதிநிதி பாஸ்கா், மற்றும் முரளிதரன், மணி உள்பட பலர் கலந்து கொண்டனா்.
பாக்ஸ்: திமுகவில் இணைந்த முஸ்லீம் கட்சியில்இணைந்த நிா்வாகி கூறுகையில் இந்த கட்சி 60 ஆண்டுகளாக கலைஞா் காலம் தொட்டு ஸ்டாலின் காலம் வரை இணைந்து கொள்கை பிடிப்போடு இருந்தது. தற்போது தடம் மாறி விஜய் ஆட்சியின் அமைச்சரவையில் இணைந்து பணியாற்றிய காரணத்தால் எங்களால் ஜீரணிக்க முடியவில்லை அதனால் அக்கட்சியிலிருந்து விலகி திமுகவில் இணைந்துள்ளோம். இது தமிகழத்தில் முதல் ஆரம்பகட்டம் அடுத்தப்படியாக ராமநாதபுர மாவட்டத்தில் பலா் விலகி திமுகவில் இணைய உள்ளனா். அதனை தொடா்ந்து தமிழகம் முழுவதும் இணைப்பு நிகழ்ச்சி நடைபெறும் என்று கூறினாா்.