தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420
குண்டடம்,
திருப்பூர் மாவட்ட காவல்துறையின் சமூக மற்றும் மனித உரிமைகள் பிரிவு சார்பில், உதவி ஆய்வாளர் லெனின் தலைமையில் சேடபாளையம் மற்றும் ஜோதியம்பட்டி பகுதிகளில் மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சியில், போக்சோ சட்டம், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், குற்றங்களுக்கு வழங்கப்படும் தண்டனைகள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு தொடர்பான சட்ட விதிமுறைகள் குறித்து மாணவர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது.
மேலும், குழந்தைகள் தங்களுக்கு ஏற்படும் பிரச்னைகள் குறித்து தயக்கமின்றி பெற்றோர், ஆசிரியர்கள் அல்லது காவல்துறையினரிடம் தெரிவிக்க வேண்டும் என்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.