தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420
குண்டடம்,
குண்டடம் காவல் நிலையத்தில் தனியார் பள்ளி மாணவர்களுக்கு காவல் நிலையத்தின் செயல்பாடுகள் குறித்து விளக்கமளிக்கப்பட்டது.
இதில், காவலர்களின் பணிகள், காவல்துறையினரின் சீருடைகள், காவல் பணியில் பயன்படுத்தப்படும் உபகரணங்கள் மற்றும் அவற்றின் பயன்பாடுகள் குறித்து மாணவர்களுக்கு விளக்கிக் கூறப்பட்டது.மேலும், காவல் நிலையத்தில் கைதிகள் தங்க வைக்கப்படும் அறை, அதுதொடர்பான நடைமுறைகள் உள்ளிட்ட காவல் நிலையத்தின் செயல்பாடுகள் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
காவல்துறையின் பணிகள் மற்றும் காவல் நிலைய செயல்பாடுகளை மாணவர்கள் நேரடியாக அறிந்து கொள்ளும் வகையில் இந்த நிகழ்வு அமைந்தது.