புதுவைத் தமிழ்ச் சங்கத்தில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து திருக்குறள் கூறும் நிகழ்ச்சி மாதம்தோறும் 20-ஆம் தேதி நடைபெற்று வருகிறது.

இந்நிகழ்விற்கு புதுவைத் தமிழ்ச் சங்கத் தலைவர் கலைமாமணி முனைவர் வி.முத்து தலைமை தாங்கினார். செயலர் சீனு மோகன்தாசு வரவேற்புரையாற்றினார். இந்கழ்வில் முத்தியால் பேட்டை சட்டமன்ற உறுப்பினர் வையாபுரி மணிகண்டன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து திருக்குறள் கூறும் நிகழ்வினை தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்வில் பங்கேற்ற நியூலேண்ட் உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவருக்கும் திருக்குறள் புத்தகம் வழங்கினார். பங்கேற்ற அனைவரும் திருக்குறள் கூறினார்கள். சிறப்பு விருந்தினர் சட்டமன்ற உறுப்பினர் வையாபுரி மணிகண்டன் அவர்களுக்கு புதுவைத் தமிழ்ச் சங்கத் தலைவர் கலைமாமணி முனைவர் வி.முத்து பொன்னாடை அணிவித்து பாராட்டினார்.
உடன் புதுவைத் தமிழ்ச் சங்கப் பொருளர் மு.அருள் செல்வம், துணைத் தலைவர் ப.திருநாவுக்கரசு, சுயநிதி பள்ளி கூட்டமைப்பின் தலைவர் முனைவர் ரங்கநாதன், பொறிஞர் மு.பாலசுப்பிரமணியன், முனைவர் கோ.பாரதி, ஆட்சிக்குழு உறுப்பினர்கள் தமிழ்மாமணி அ.உசேன், கலைமாமணி எம்.எஸ்.ராஜா, அ.சிவேந்திரன்,இர.ஆனந்தராசன், இளங்கோவன்,ராஜா, முனைவர் ரேகா,செந்தில்,நியூ லேண்ட் உயர்நிலைப் பள்ளியின் ஆசிரியர்கள் காயத்திரி,சகாயமேரி, லிபிகா, நந்தினி மற்றும் 200-க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள்,பொதுமக்கள் என ஏராளமானோர் பங்கேற்று சிறப்பித்தனர்.
செய்தியாளர்: பா. சீனிவாசன், வந்தவாசி.