புதுச்சேரி மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் க.ஜெயராமன் அறிவிப்பு ஒன்று வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:

காரைக்கால் மாவட்ட தொழில் மையம் ஒவ்வொரு ஆண்டும் காரைக்காலில் உள்ள அரசு மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்கள் மூலம் தொழில் பயிற்சிகளை நடத்தி வருகிறது. நடப்பு 2026-27ம் ஆண்டிற்கான தொழிற்கூட பயிற்சிகளை பெறுவதற்கு படித்து வேலையில்லா நபர்களிடமிருந்து விண்ணப்பங்களை வரவேற்கிறது. பயிற்சியில் கலந்து கொள்ள விரும்புவோர் edistrict.py.gov.in என்ற இணையதள வழியாக 31.08.2026-க்குள் விண்ணப்பிக்கலாம்.

31.08.2026 அன்று 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும், 35 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். காரைக்கால் மாவட்டத்தை சேர்ந்தவராக இருக்க வேண்டும். மத்திய, மாநில அரசின் மூலம் ஏற்கனவே எந்தவித பயிற்சியும் பெறாதவராகவும் இருக்க வேண்டும். தேர்ந்தெடுக்கப்பட்ட பயிற்சியாளர்களுக்கு பயிற்சிக்கு ஏற்ப நிர்ணயம் செய்யப்பட உதவித்தொகை வழங்கப்படும். மேலும் விபரங்களுக்கு 0413-2248391 / 2249392 / 04638-266467 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *