புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட ஆட்சியர் இஷிதா ராட்டி தலைமையில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது. மாவட்ட சார்பு ஆட்சியர் எம்.பூஜா மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.
| முகாமில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சிவப்பு நிற குடும்ப அட்டை இலவச மனைப்பட்டா, தெருவிளக்கு வசதி, குடிநீர் தட்டுப்பாடு, சாலை வசதி, வடிகால் வசதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை மனுக்களை அளித்தனர்.
பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் அளித்து மனுக்கள் மீது உரிய பரிசீலனை செய்து விரைந்து தகுந்த நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டார்.
S.செய்யது தாஜுல் உசேன்
மாவட்ட செய்தியாளர்
காரைக்கால்