அரியலூரில் நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் தமிழக முதலமைச்சர் நெடுஞ்சாலை துறை அமைச்சர் ஆகியோருக்கு கோரிக்கை மனு அனுப்பும் இயக்கம் இயக்கமும் ஆர்ப்பாட்டமும் அரியலூர் கோட்ட பொறியாளர் அலுவலகம் முன்பு நடந்தது மாவட்ட சங்க தலைவர் ஆர் பைரவன் தலைமை தாங்கினார் மாவட்ட செயலாளர் ஏ எஸ் ஆர் அம்பேத்கார் விளக்க உரையாற்றினார்
அரசு அலுவலர் சங்க செயலாளர் ஷேக்தாவூத் சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் காந்தி மாநில பொருளாளர் இரா தமிழ் ராகவன் காமராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர் மாநில துணைத்தலைவர் கு பழனிசாமி நிறைவுறையாற்றினார் மாவட்ட பொருளாளர் மூர்த்தி அனைவருக்கும் நன்றி கூறினார்
மாநில நெடுஞ்சாலை ஆணையத்தை கலைத்து விட்டு நெடுஞ்சாலை பராமரிப்பு பணியை அரசே செயல்படுத்த வேண்டும் கிராம புற இளைஞர்களை சாலை பணியாளராக பணி நியமனம் செய்திட வேண்டும் சாலை பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை சென்னை உயர்நீதிமன்ற வழக்கு எண்ணின் படி தீர்ப்பு நாள் 23.10.2024 இன் படி மேல்முறையீட்டு மனுவை திரும்ப பெற்று பனிக்காலமாக முறைப்படுத்தி ஆணை வழங்க வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டமும் கோரிக்கை மனு அனுப்பும் இயக்கமும் நடந்தது பின்பு கோட்ட பொறியாளர் அலுவலகத்தில் கோரிக்கை மனு நிர்வாகிகளால் வழங்கப்பட்டது