தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.
ஜோ. லியோ யாக்கோப் ராஜ்.

தஞ்சாவூர், ஆக‌- 20.
தஞ்சாவூர் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் அமைப்பின் தமிழ்நாடு சாலிடாரிட்டி மாநிலத் தலைவர் முஹம்மது ரியாஸ் நிருபர்களுக்கு கூறியதாவது:-
ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் கடந்த 75 ஆண்டுகளுக்கும் மேலாக நாட்டில் பல்வேறு களங்களில் மக்கள் பணியாற்றி வருகிறது. மக்கள் பிரச்சனையை முன்வைத்து சமுதாய நலன்களை காக்க பல்வேறு பரப்புரைகளை முன்னெடுத்துள்ளோம். அந்த வகையில் மனித குலத்தை நாசப்படுத்தும் மது போதையில் இருந்து மனித குலத்தை மீட்டெடுக்க தற்போது பரப்புரையை தொடங்கி உள்ளோம்.


இன்றைய காலகட்டத்தில் இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் போதை பொருள் பழக்கம் பெரும் அச்சுறுத்தலாக இருக்கிறது குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் போதை பழக்கம் அதிகரித்துள்ளது.

தமிழ்நாட்டை மது, போதைப் பொருட்கள் இல்லாத ஆரோக்கியமான மாநிலமாக மாற்றும் நோக்கில் மது மற்றும் போதைக்கு எதிரான மக்கள் விழிப்புணர்வு பரப்புரையை
ஜமாத்தே இஸ்லாமி ஹிந்த் சார்பாக மாநில அளவில் ஆகஸ்ட் 15-ந்தேதி தொடங்கி 30 வரை நடைபெற இருக்கிறது.


தெருமுனை கூட்டம், பொதுக்கூட்டம், ஆளுமைகள் சந்திப்பு நேர்காணல், கண்காட்சி அரங்க கூட்டம் என பல்வேறு பணிகள் இந்த பரப்புரையில் நடைபெற இருக்கிறது. மது மற்றும் போதை இல்லா புதிய சமூகத்தை படைக்க சமூக ஆர்வலர்கள், தன்னார்வலர்கள், பெற்றோர்கள், பொதுமக்கள் அனைவரும் விழிப்புணர்வு பரப்புரையில் பெரும் திரளாக பங்கேற்று ஆதரவு தருமாறு கேட்டுக்
கொள்கிறோம்.

தமிழ்நாடு அரசும் மக்களின் நலன் கருதி மது இல்லா தமிழ்நாடு உருவாக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
அரசு டாஸ்மாக் முழுவதுமாக கைவிட வேண்டும் .
இந்த பரப்புரையில் 5 லட்சம் மக்களிடம் கையெழுத்து இயக்கம் நடைபெறுகிறது . இணையதளம் வாயிலாக நடைபெறும் இந்த கையெழுத்து இயக்கத்திற்கு அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் . தமிழ்நாட்டிலும் மது ஒழிப்பை சாத்தியப்படுத்த முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு மாவட்ட துணை தலைவர் ஜாகிர் உசேன், ஐயூஎம்எல் மாவட்ட செயலாளர் ஜெய்னுல்ஆபீதின் , ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் அமைப்பின் மகளிர் அணி பாத்திமா ஜான் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர் .

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *