கரண்ட் பில் இனி ZERO? கோவை பள்ளியில் நுழைந்த புது டெக்னாலஜி புவி வெப்பமயமாதலை தடுக்க கோவையில் மாபெரும் மாநாடு பழங்குடியின பள்ளிக்கு இலவச சோலார்: இஷ்ரே அமைப்பின் அசத்தல் திட்டம்! 1000+ விஞ்ஞானிகள் பங்கேற்கும் Cool Conclave 3.0

இந்தியன் சொசைட்டி ஆஃப் ஹீட்டிங், ரெஃப்ரிஜிரேட்டிங் அண்ட் ஏர்கண்டிஷனிங் என்ஜினியர்ஸ் (இஷ்ரே) அமைப்பு சார்பில் கூல் காங்க்லேவ் 3.0 அகில இந்திய மாநாடு கோவையில் உள்ள ஹோட்டல் மெர்லீஸ் வளாகத்தில் ஆகஸ்ட் 20, 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.

இது தொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பு கோவையில் நடைபெற்றது.

அதில் பேசிய இஷ்ரே தலைவர் டாக்டர் சரவணன் பேசும் போது கட்டடங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் வெளியாகும் கரியமில வாயு உமிழ்வைக் குறைத்து, புவி வெப்பமயமாதலைத் தடுப்பதே இம்மாநாட்டின் முக்கிய நோக்கமாகும். இதில் இந்தியா முழுவதிலும் இருந்து 1,000-க்கும் மேற்பட்ட தொழில் வல்லுநர்களும், 100-க்கும் மேற்பட்ட சர்வதேசப் பேச்சாளர்களும் பங்கேற்கின்றனர்.


இந்தியா முழுவதும் 100% நிகர பூஜ்ய மின்தேவை (Net Zero Energy) இலக்கை அடைய இஷ்ரே பாடுபட்டு வருகிறது. இதன் முன்னோடியாக, கோவை காந்தவயல் அரசு பழங்குடியின மாணவர் உண்டு உறைவிடப் பள்ளிக்கு 100% இலவச சோலார் கட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டு, கடந்த ஆகஸ்ட் 15 முதல் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. இதேபோலத் தகுதியுள்ள பிற பள்ளிகளுக்கும் இலவச சோலார் இணைப்புகள் வழங்கப்படும் என்று கூறினார்.

இச்சந்திப்பின் போது, டெலாய்ட் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கப்பட்ட வெப்பமயமாக்கும் இந்தியாவைக் குளிர்வித்தல் கையேடும் வெளியிடப்பட்டது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *