தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420

.குண்டடம்.திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அடுத்துள்ள குண்டடம் அரசு மேல்நிலைப்பள்ளி அருகே தொடக்கக்கல்வி ஆசிரியர்கள் கூட்டு நடவடிக்கை குழு (TETOJAC) சார்பில் இன்று கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

குண்டடம் வட்டாரத்தைச் சேர்ந்த ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியைகள் சுமார் 35 பேர் கலந்து கொண்டு, தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் தமிழக ஆசிரியர் கூட்டணி தலைவர் முரளிதாஸ், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சார்பில் தர்மராஜ், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் சார்பில் சக்திவேல் உள்ளிட்டோர் தலைமை வகித்தனர்.

ஆசிரியர்களின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற இந்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஆசிரியர்கள் திரளாக பங்கேற்றனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *