தேனி மாவட்டத்திற்கு உட்பட்ட பேரூராட்சிகளில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்களுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் குறைதீர் கூட்டம் தேனி மாவட்டம் தேனி மாவட்டத்திற்குட்பட்ட பேரூராட்சிகளில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு ஓய்வூதிய பலன்கள் வழங்கப்படாமல் நிலுவையில் உள்ள குறைகள் தொடர்பாக பேரூராட்சிகளின் இயக்குனர் தலைமையில் வருகிற 25.08.2026 செவ்வாய்க்கிழமை காலை 11 மணிக்கு காணொளிக் காட்சி வாயிலாக குறை தீர்வு கூட்டம் நடைபெற உள்ளது எனவே ஒய்வூதிய பலன்கள் தொடர்பான குறைகள் நிலுவையில் உள்ள ஒய்வு பெற்ற பேரூராட்சி பணியாளர்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்று தங்களது குறைகளை தெரிவித்து தீர்வு பெறலாம் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள விரும்பும் ஓய்வு பெற்ற பணியாளர்கள் தேனி மாவட்டத்திற்கு உட்பட்ட பேரூராட்சி அலுவலகம் அல்லது தேனி மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் அலுவலகத்திற்கு நேரில் ஒரு மணி நேரம் முன்னதாக கலந்து கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவர் இரா வைத்திநாதன் தெரிவித்துள்ளார்.