கோவை நவக்கரையில் உள்ள ஏ.ஜே.கே கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ‘செய்தகா’ என்ற பொருண்மையில் ஓணம் பண்டிகை கொண்டாட்டம் மற்றும் போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு விழா ஆகஸ்ட் 14 முதல் 20 வரை மிகக் கோலாகலமாக நடைபெற்றது.
​விழாவின் நிறைவு நாளான ஆகஸ்ட் 20 அன்று, போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. “போதைப்பொருளுக்கு ‘இல்லை’ என்று சொல்லுங்கள்; உணவு விருந்துக்கு (சத்யாவுக்கு) ‘ஆம்’ என்று சொல்லுங்கள்!” என்ற வாசகம் அடங்கிய விழிப்புணர்வு பதாகையை மாவலி மன்னன் வெளியிட, ஏ.ஜே.கே கல்வி நிறுவனங்களின் தலைவர், நிறுவனர் முனைவர். பேராசிரியர். அஜித் குமார் லால் மோகன் பேரணியைத் தொடங்கி வைத்தார்.

​மாணவர்கள் போதைப்பொருள் ஒழிப்பு பதாகைகளை ஏந்தியும், விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தும் நவாக்கரையிலிருந்து கல்லூரி வரை பேரணியாக வந்தனர். இப்பேரணியில் பஞ்ச வாத்தியம், செண்ட மேளம், சிங்காரி மேளம், தம்போலம், நாசிக் டோல், ஜமாப், பாண்டி மேளம் உள்ளிட்ட பலவித பாரம்பரிய இசைக்கருவிகள் முழங்கப்பட்டன.
​கல்லூரி வளாகத்தில் 40 கிலோ பூக்களால் ஆன பிரம்மாண்டமான பூக்கோலம் அமைக்கப்பட்டு வரவேற்பு அளிக்கப்பட்டது.

மேலும், கயிறு இழுத்தல், உரியடி போன்ற பாரம்பரிய போட்டிகளும், பூக்காவடி, கதகளி நடனம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. குறிப்பாக, Kerala பாரம்பரிய கசவு ஆடையில் 200-க்கும் மேற்பட்ட மாணவிகள் மற்றும் ஆசிரியைகள் பங்கேற்ற மெகா திருவாதிரை நடனம் அனைவரையும் கவர்ந்தது. போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
​கொண்டாட்டத்தின் பகுதியாக, அடப்பிரதமன், முக்கனி பாயாசம் உள்ளிட்ட 25 வகையான உணவுகளுடன் சுவையான ‘ஓணம் சத்யா’ விருந்து மாணவ-மாணவிகளுக்கும் ஆசிரியர்களுக்கும் பரிமாறப்பட்டது.
​விழாவில் பேசிய கல்லூரித் தலைவர் முனைவர் அஜித் குமார் லால் மோகன், ஓணம் பண்டிகையின் முக்கியத்துவமான ஒற்றுமை, மகிழ்ச்சி, செல்வம் மற்றும் போதையில்லா சமுதாயம் ஆகியவை அனைவரிடமும் சென்று சேர வேண்டும் என்று கூறி மாணவர்களுக்குத் தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *