திருவாரூர் வாசன் நகரில் அமைந்துள்ள அருள்மிகு ஜோதி ஸ்வர்ண லிங்கேஸ்வரர் ஆலயத்தில், மனோன்மணி அம்பாள் திருவூஞ்சல் உற்சவம் 21.08.2026 அன்று சிறப்பாக நடைபெற்றது.

இதையொட்டி, முன்னதாக ஆலயத்தில் சிறப்பு பூஜைகள் மற்றும் ஆன்மிக நிகழ்வுகள் நடைபெற்றன. மனோன்மணி அம்பாள் உற்சவர் மற்றும் மூலவர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.பால், தயிர், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு அபிஷேகப் பொருட்களால் நடைபெற்ற சிறப்பு அபிஷேகத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு இறைவன் மற்றும் இறைவியின் அருளைப் பெற்றனர். அபிஷேகத்தைத் தொடர்ந்து சுவாமி மற்றும் அம்பாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை நடைபெற்றது.இதனைத் தொடர்ந்து ஆலயத்தில் சகஸ்ரநாம பாராயணம் பக்தி பரவசத்துடன் நடைபெற்றது.


இதன் தொடர்ச்சியாக, மனோன்மணி அம்பாளின் ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது. மலர்களாலும் பாரம்பரிய அலங்காரங்களாலும் அழகுற அலங்கரிக்கப்பட்ட ஊஞ்சலில் மனோன்மணி அம்பாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.விழாவின் நிறைவாக மகா தீபாராதனை நடைபெற்றது. அப்போது ஆலயத்திற்கு வந்திருந்த பக்தர்கள் அனைவரும் பக்தியுடன் கலந்து கொண்டு அம்பாள் மற்றும் சுவாமியின் அருளைப் பெற்றனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *