கோவை மாவட்ட அளவிலான சதுரங்க போட்டி, கோவை புதூர் வித்யாஸ்ரம் பள்ளியில் நடைபெற்றது.பள்ளிக்கல்வித்துறை மற்றும் கோவைபுதூர் ஆஸ்ரம் மெட்ரிக் பள்ளி இணைந்து நடத்தி ய போட்டியில், கோவை மாவட்டத்திற்கு உட்பட்ட 14 குறுமையங்களில் நடைபெற்ற சதுரங்க போட்டிகளில் சிறப்பாக விளையாடி தேர்வு செய்யப்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

முன்னதாக போட்டிகளை ஆஸ்ரம் மெட்ரிக் பள்ளி தாளாளர் தேவேந்திரன்,மற்றும் மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் குமரேசன் ஆகியோர் துவக்கி வைத்தனர்…

கோவை மாவட்டத்தில் உள்ள சுமார் 400 அரசு மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் பங்கேற்ற நிலையில், குறுமைய அளவில் நடைபெற்ற போட்டிகளில் இருந்து மாவட்ட அளவிலான போட்டிக்கு தகுதி பெற்ற மாணவர்கள் இதில் தங்களது திறமையை வெளிப்படுத்தினர்.

வயது மற்றும் பிரிவுகளின் அடிப்படையில் ஆறு சுற்றுகளாக நடைபெற்ற போட்டிகளில்,சிறப்பாக விளையாடி வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்கள் வழங்கி கவுரவிக்கப்பட்டது…

பரிசளிப்பு விழாவில்,ஆஸ்ரம் மெட்ரிக் பள்ளி நிர்வாகி உதயேந்திரன்,வித்யாஸ்ரம் பள்ளி நிர்வாக இயக்குனர் சவுந்தர்யா,ஆஸ்ரம் பள்ளி முதல்வர் சரண்யா,இயல் செஸ் அகாடமி நிறுவனர் பிரேம்,மற்றும் குறுமைய விளையாட்டு குழு ஒருங்கிணைப்பாளர்கள் சைமன் துரை,கெம்பராஜ்,உட்பட பலர் கலந்து கொண்டனர்…

மாவட்ட அளவில் வெற்றி பெற்ற மாணவர்கள் அடுத்தகட்டமாக மாநில அளவிலான சதுரங்க போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டனர்…

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *