பெரம்பலூர்.நவ.19. இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி,  பெரம்பலூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனடிப்படையில், வாக்காளர்களுக்கு 4.11.2025 முதல் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வீடு வீடாகச் சென்று கணக்கீட்டுப் படிவங்களை வழங்கி அதை எவ்வாறு பூர்த்தி செய்ய வேண்டும் என்பது குறித்து விளக்கமளித்தனர்.
பூர்த்தி செய்யப்பட்ட கணக்கீட்டுப் படிவங்களை வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் இந்திய தேர்தல் ஆணையத்தின் செயலியில் பதிவேற்றும் பணிகள் தீவிர படுத்தப்பட்டுள்ளது.

கணக்கீட்டுபடிவங்களை பூர்த்தி செய்ய இயலாத வாக்காளர்களுக்கு தன்னார்வலர்கள் மூலமாக கண்கெடுப்பு படிவம் பூர்த்தி செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது
குன்னம் வட்டத்தில் 23.11.2025 மற்றும் 24.11.2025 அதவது சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அந்தந்த வாக்குச்சாவடி மையங்களில் படிவங்களை பூர்த்தி செய்வது தொடர்பாக உதவி மையம் செயல்படுத்தப்பட உள்ளது. இந்த உதவி மையத்திற்கு வரும் வாக்காளர்கள் தங்கள் குடும்பத்தில் உள்ள வாக்காளர்களுக்கு வழங்கப்பட்ட வாக்காளர் கணக்கீட்டுப் படிவங்களுடன், வாக்காளர் அடையாள அட்டைகள் மற்றும் ஆதார் அட்டைகள் எடுத்து வருமாறு தெரிவிக்கப்படுகிறது. வாக்காளர்கள் இவ்வாய்ப்பினை முழுமையாக பயன்படுத்தி பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

பரீட்சார்த்த முறையில் குன்னத்தில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் அமைக்கப்பட்ட உதவி மையத்தினை குன்னம் சட்டமன்ற தொகுதியின் வாக்காளர் பதிவு அலுவலர் மற்றும் மாவட்ட வழங்கல் அலுவலர் சக்திவேல் அவர்கள் பார்வையிட்டு ஆய்வுசெய்தார். இந்த ஆய்வின்போது குன்னம் வட்டாட்சியர் சின்னதுரை உடனிருந்தார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *