கல்பாக்கம், ஆக. 22: அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே. பழனிசாமி, கட்சியின் மாநில இலக்கிய அணித் தலைவராக திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காடு ஒன்றியம், குப்பம் கண்டிகை பகுதியைச் சேர்ந்த முன்னாள் தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநர் முனைவர் கோ. விசயராகவனை நியமித்துள்ளார்.
கடந்த 19ஆம் தேதி நடைபெற்ற இந்த நியமனத்தைத் தொடர்ந்து, மாநில இலக்கிய அணித் தலைவராக பொறுப்பேற்றுள்ள முனைவர் கோ. விசயராகவன், நேற்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமியை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.
இதையடுத்து, கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் முனைவர் கோ. விசயராகவனுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தனர். தமிழ் வளர்ச்சித்துறையில் பணியாற்றிய அனுபவம் கொண்ட அவர், அதிமுகவின் மாநில இலக்கிய அணித் தலைவராக நியமிக்கப்பட்டிருப்பது கட்சி வட்டாரத்தில் வரவேற்பைப் பெற்றுள்ளது.