தேனி மாவட்டத்திலேயே குச்சனூர் பேரூராட்சியில் மக்கள் தொகை கணக்கெடுப்பை விரைந்து முடித்த ஆசிரியர்களுக்கு சிறப்பு மரியாதை செய்த பேரூராட்சி மன்ற தலைவர் தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள குச்சனூர் பேரூராட்சியில் மேற்கொள்ளப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு வெற்றிகரமாக நிறைவடைந்து

தேனி மாவட்ட அளவில் குச்சனூர் பேரூராட்சி ஆசிரியர்களுக்கு பேரூராட்சி அலுவலகத்தில் பேரூராட்சி மன்ற தலைவர் பி டி. ரவிச்சந்திரன் செயல் அலுவலர் சின்னசாமி பாண்டியன் சிறப்பு மரியாதை செய்து கௌரவித்தனர்

கடந்த ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் குச்சனூர் பேரூராட்சியில் உள்ள 12 வார்டுகளிலும் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் முறைப்படி தொடங்கப்பட்டது இந்தப் பணிக்காக நியமிக்கப்பட்ட 12 ஆசிரியர்களும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வார்டு பகுதிகளில் வீடு வீடாக சென்று தரவுகளை சேகரித்து மிகவும் துல்லியமாகவும் விரைவாகவும் பணிகளை முடித்தனர்

கணக்கெடுப்பில் ஈடுபட்ட ஆசிரியர்களின் பணி தேனி மாவட்டத்திலேயே மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியை முழுமையாக முடித்த முதல் பேரூராட்சி என்ற பெருமையை குச்சனூர் பெற்றுள்ளார்

ஆசிரியர்களை பாராட்டும் விதமாக குச்சனூர் பேரூராட்சி மன்ற தலைவர் பி டி ரவிச்சந்திரன் செயல் அலுவலர் சின்னச்சாமி பாண்டியன் ஆகியோர் தலைமையில் பேரூராட்சி அலுவலக கூட்ட அரங்கில் பாராட்டு விழா நடைபெற்றது

அதில் சிறப்பாக பணியாற்றிய 12 ஆசிரியர்களுக்கும் பேரூராட்சி நிர்வாகத்தின் சார்பில் பொன்னாடை போர்த்தி நினைவு பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர் ஆசிரியர்களின் சுறுசுறுப்பான செயல்பாட்டால் பொது மக்களின் முழுமையான ஒத்துழைப்புமே இந்த சாதனைக்கு முக்கிய காரணம் என்று பேரூராட்சி அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *