கும்பகோணம் : குடந்தை ரத்ததானம் அறக்கட்டளை எட்டாம் ஆண்டு தொடக்கத்தை முன்னிட்டு ரகுராம் மருத்துவமனை இணைந்து நடத்திய இலவச கண் மற்றும் காது மருத்துவ முகாம் கார்த்திக் வித்யாலயா பள்ளியில் நடத்தியது.

முகாமில் மருத்துவர்கள் பொதுமக்களுக்கு கண் பரிசோதனை செய்து கண்களை பாதுகாப்பது குறித்த ஆலோசனைகளை விரிவாக எடுத்துரைத்தனர். பார்வை குறைபாடு உள்ளவர்களுக்கு கண்ணாடிகள், மருந்துகள் வழங்கப்பட்டன. காது தொடர்பான பிரச்னைகளுக்கும் பரிசோதனை செய்து சிகிச்சை அளிக்கப்பட்டது.இதில் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு பயனடைந்தனர்.முகாமிற்கான ஏற்பாடுகளை குடந்தை ரத்ததானம் அறக்கட்டளை உறுப்பினர்கள் செய்திருந்தனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *