கோவை
கோவையில் மாநில அளவிலான திறந்த சிலம்பம்,கராத்தே,யோகா போட்டி
பள்ளி கல்லூரி மாணவர்கள் துவங்கி பெரியவர்கள் வரை ஈரோடு, திருப்பூர் நீலகிரி ,மதுரை, திருச்சி மாவட்டங்களில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஆர்வமுடன் பங்கேற்பு
கோவையில் தேசிய விளையாட்டு மேம்பாட்டு கூட்டமைப்பு சார்பில் மாநில அளவிலான திறந்த சிலம்பம், கராத்தே மற்றும் யோகா சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்றது.
கோவையில் உள்ள தனியார் பள்ளியில்,கோகுல் சிலம்பம் அகாடமி ஏற்பாட்டில், நேட்டிவ் ஸ்போர்ட்ஸ் டெவலப்மென்ட் பெடரேஷன் இணைந்து போட்டிகளை நடத்தின.இதில் 3 வயது முதலான சிறுவர்,சிறுமிகள்,பள்ளி கல்லூரி மாணவர்கள், ஆண்கள், பெண்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
சிலம்பம், கராத்தே மற்றும் யோகா உள்ளிட்ட போட்டிகளில் பல்வேறு பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றன.போட்டிகளில் பங்கேற்ற வீரர்,வீராங்கனைகள் சிலம்பம்,யோகா,கராத்தே ஆகிய போட்டிகளில் தங்கள் தனித்திறமைகளை வெளிப்படுத்தினர்.
பாரம்பரிய தற்காப்புக் கலையான சிலம்பம் உள்ளிட்ட விளையாட்டுகளை இளம் தலைமுறையினரிடம் கொண்டு சேர்க்கும் வகையிலும், அவர்களின் விளையாட்டு திறமைகளை வெளிக்கொண்டு வரும் வகையிலும் இந்த மாநில அளவிலான போட்டிகள் நடைபெற்றதாக போட்டி ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.
வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு தகுதிச் சான்றிதழ்கள், பதக்கங்கள் மற்றும் கோப்பைகள் வழங்கப்பட்ட நிலையில், இதில் தேர்வு செய்யப்பட்டோர் கேரள மாநிலம் மூணாறில் நடைபெற உள்ள தேசிய அளவிலான சாம்பியன்ஷிப் போட்டிகளில் பங்கேற்க உள்ளது குறிப்பிடதக்கது.