அரியலூரில் திருக்குறள் விளக்க உரை நூல் வெளியிடப்பட்டது அரியலூர் மாவட்ட எழுத்தாளர்கள் நல சங்கம் சார்பில் சங்கத்தின் நிறுவனர் தலைவர் கவிமுரசுராஜாராம் எழுதி வெளியிட்டுள்ள திருக்குறள் விளக்க உரை நூல் வெளியீட்டு விழா அரியலூர் லிங்கத்தடிமேடு வள்ளலார் கல்வி நிலையத்தில் சிறப்பாக நடந்தது விழாவில் இந்த விழாவில் மொழியியல் ஆய்வியல் தக்கார் மசோ விக்டர் நூலை வெளியிட எம் ஆர் சி கல்வி குழுமம் தாளாளர் எம் ஆர் ரகுநாதன் நூலை பெற்றுக் கொண்டார்
விழாவிற்கு தமிழ் பண்பாட்டு பேரமைப்பு தலைவர் சீனிபாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார் பள்ளியின் தாலாளர் கொ வி புகழேந்தி தலைமை ஆசிரியர் சௌந்தரராஜன் ஆசிரியர் அரியலூர்நல்லப்பன் புலவர் அரங்கநாடன் சமூக சேவகி ஹாஜிராகனி முனைவர் முத்துக்குமரன் வைகைமாலா ஆகியோர் விழாவிற்கு முன்னிலை வகித்தனர் அறச்செல்வி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார் முன்னதாக புவனாஸ்ரீ பரதநாட்டியத்துடன் விழா துவங்கியது
கவிஞர் இளஞ்செழியன் அரிமா சங்க முன்னாள் தலைவர் செல்வராணிகொவிபுகழேந்தி மேல்நிலைப்பள்ளி முன்னாள் தலைமை ஆசிரியர் எஸ்பிதமிழ்ச்செல்வன் உட்பட ஏராளமானோர் விழாவில் கலந்து கொண்டனர்
எம் ஆர் சி கல்வி குழுமங்களின் தலைவர் ரகுநாதன் திருக்குறள் விளக்க உரை நூல்கள் 300 பிரதிகளை விலைக்கு வாங்கி வள்ளலார் கல்வி நிலையத்தில் பயிலும் மாணவ மாணவிகள் 200 பேருக்கு அந்த புத்தகங்களை இலவசமாக வழங்கினார் மீதமுள்ள 100 புத்தகங்களை எம் ஆர் சி கல்வி நிறுவனங்களுக்கு வழங்கினார் கவிஞர் செவ்வந்தி அனைவருக்கும் நன்றி கூறினார் அமைப்பு செயலாளர் மங்கையர்க்கரசி ஏற்புரை நிகழ்த்தினார் விழா இனிதே நிறைவு பெற்றது