திருவாரூர் மாவட்டம், வேளுக்குடியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ பிரஸன்ன வேங்கடேச பெருமாள் மற்றும் ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் திருக்கோவிலில், நான்காம் ஆண்டு கும்பாபிஷேக தின விழா சிறப்பாக நடைபெற்றது.இதனையொட்டி நேற்று மாலை நடைபெற்ற திருக்கல்யாண வைபவம், வெகு விமரிசையாக நடைபெற்றது.விழாவையொட்டி ஆலயத்தில் சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடைபெற்றன. திருக்கோவில் வளாகம்
விழாவின் முக்கிய நிகழ்வாக ஸ்ரீ பிரஸன்ன வேங்கடேச பெருமாளுக்கும், திருக்கல்யாண வைபவத்திற்கான சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு, வேத மந்திரங்கள் முழங்க திருக்கல்யாண நிகழ்ச்சிகள் நடைபெற்றன.அர்ச்சகர்கள் வேத மந்திரங்கள் மற்றும் மங்கல மந்திரங்களை ஓத, மேளதாளங்கள் முழங்க, பக்தர்கள் கோவிந்தா… கோவிந்தா… என பக்தி பரவசத்துடன் இறைவனை வழிபட்டனர். பின் இரவு வீர ஆஞ்சநேயர் உற்சவர் வீதியுலா புறப்பாடு சிறப்பாக நடைபெற்றது.