மாவட்ட ஆட்சியரிடம் காண்பித்து வாழ்த்து பெற்ற நகர் மன்ற தலைவர்
தேனி மாவட்டம், போடிநாயக்கனூர் நகராட்சி சிறப்பாக செயல்பட்டதற்காக, சிறந்த உள்ளாட்சி அமைப்புக்கான தமிழ்நாடு முதலமைச்சர் விருதைப் பெற்றுள்ளது.
இந்த விருது வழங்கப்பட்டதையொட்டி, திங்கட்கிழமை தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் இரா. வைத்திநாதன் அவர்களை போடிநாயக்கனூர் நகர மன்றத் தலைவர் ராஜராஜேஸ்வரி சங்கர் மற்றும் நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) செல்வி எஸ். பார்கவி ஆகியோர் சந்தித்து, முதலமைச்சர் விருதை காண்பித்து வாழ்த்து பெற்றனர்.
அப்போது, போடிநாயக்கனூர் நகராட்சியின் சிறப்பான செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் பாராட்டுத் தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் நகராட்சி பொறியாளர் வி. குணசேகரன், முன்னாள் நகர மன்ற துணைத் தலைவர் எம். சங்கர் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.