மறைந்த விஜயகாந்த் பிறந்தநாள் முன்னிட்டு இலவச கண் கண்ணாடி வழங்கும் நிகழ்வு.
செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் ஒன்றியம்: நல்லாமூர் ஊராட்சியில் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பில் இலவச கண் மருத்துவ முகாம் நடைபெற்றது.
தேசிய முற்போக்கு திராவிட கழக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் நல்லாசியுடனும், காஞ்சி மாவட்ட கழக செயலாளர் வழக்கறிஞர் எம். ராஜேந்திரன் ஆலோசனையின்படியும் இம்முகாம் நடைபெற்றது.
முகாமில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு கண் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் கண்புரை மற்றும் பார்வைக் குறைபாடு உள்ளவர்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு இலவசமாக கண் கண்ணாடிகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்வில் முன்னாள் மதுராந்தகம் தெற்கு ஒன்றிய பொருளாளர் நல்லாமூர் எஸ். ரமேஷ் தலைமை வகித்து, பயனாளிகளுக்கு கண் கண்ணாடிகளை வழங்கினார்.
நிகழ்ச்சியில் தேசிய முற்போக்கு திராவிட கழக மதுராந்தகம் ஒன்றிய செயலாளர் பிரேம்குமார், மதுராந்தகம் முன்னாள் தெற்கு ஒன்றிய செயலாளர் சம்பத், முதுகரை மதுராந்தகம் முன்னாள் தெற்கு ஒன்றிய அவைத் தலைவர் வி.எஸ். சேகர், வெட்டுக்காடு ஒன்றிய மாவட்ட பிரதிநிதி கோதண்டராமன், கோபி, திருநாவுக்கரசு, நல்லாமூர் கிளை எஸ். சக்திவேல், பாலு, ரவிந்தர், விஜயகுமார், கோவிந்தராஜ், முருகன், நாராயணசாமி, டி. ஏழுமலை உள்ளிட்ட கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
முகாமில் பங்கேற்ற பொதுமக்கள், இலவச கண் பரிசோதனை மற்றும் கண் கண்ணாடிகள் வழங்கிய கழக நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவித்தனர்.